cross 1
Saturday, June 22, 2019
அடுத்த 6 மணிக்கு மீண்டும் 'பிகில்' ஆச்சரியம்
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிக்கும் பிகில் படத்தின் முதல் பார்வை நேற்று(ஜூன் 21) மாலை 6 மணிக்கும், இரண்டாவது பார்வை நள்ளிரவு 12 மணிக்கும் வெளியானது. அடுத்தடுத்து இரண்டு பார்வைகளை வெளியிட்டு, விஜய் பிறந்தநாளான இன்று(ஜூன் 22) விஜய் ரசிகர்களை தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சிப்படுத்தியது.
அடுத்து இன்று மாலை 6 மணிக்கு மற்றுமொரு ஆச்சரியம் காத்திருக்கிறது என படக்குழுவிலிருந்து அறிவித்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் மேலும் உற்சாகமானார். இந்நிலையில் 6 மணிக்கு மற்றுமொரு புதிய போஸ்டரை வெளியிட்டனர் படக்குழுவினர்.
அதில், ஏரியாவில் கலவரம் நடப்பது போன்று உள்ளது. விஜய் மைக்கேல் என்ற ஜெர்சியும், லுங்கியும் கட்டிக்கொண்டு கையில் சைக்கிள் செயின் கலவரக்காரர்களை எதிர்நோக்கி காத்திருப்பது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படம் பற்றிய ஒவ்வொரு சுவாரஸ்யமான போஸ்டர்களை வெளியிட்டு விஜய் ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளனர் பிகில் படக்குழுவினர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment